புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!

May 24, 20170 commentsசிறைச்சாலைகளில் சர்வ மத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதன் ஊடாக நல்ல சமூகமொன்றினை கட்டியெழுப்பும் திட்டத்துக்கு அமைவாக மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு  மொனராகலை சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.என்.சீ தனசிங்க உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். 

R.Hassan
Share this article :