இவற்றை கண்டுகொள்ளாதா ஜம்மிய்யதுல் உலமா???காத்தான்குடி பிராதான வீதியில் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தின் மேற்பகுதியில் பாரியதொரு இலங்கை தனியார் இசை வானொலியின் பதாகை வைக்கப்பட்டள்ளது. குறித்த வலையமைப்பு அல்குர்ஆனை வைத்து பூஜை செய்த விவாகரம் அனைவரும் அறிந்த விடயம் .

காத்தான்குடி சமுதாயத்தில் காத்தான்குடி முஸ்லிம்களின் தனித்துவமான பிரதேசமாக காணப்பட்டாலும் இந்த பிரதேசத்தில் ஏனைய அனாச்சாரமான விடயங்கள் நடைபெறுவதற்கு அங்கு இருக்கின்ற அமைப்புக்கள் இடமளிக்காது. அப்படி இருக்கும் பொழுது எவ்வாறு போஸ்டர் வைக்கப்பட்டது என்றுதான் புரியவில்லை.

கவனத்திற் கொண்டு இந்த இசை வானொலியின் போஸ்டரை உடனடியாக நீக்குமாறும் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அடையாளமான காத்தான்குடி நகரை மாற்றுமாறும் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் காத்தான்குடி கிளையிலும் காத்தான்குடியில் இருக்கின்ற ஏனைய அமைப்பையும் கேட்டு கொள்கின்றோம்.