கண்ணீருடன் தண்ணீரில் மிதந்த மியன்மார் அகதிகள்; பாதுகாப்பாக உள்ளனர்

பாறுக் ஷிஹான்

கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில்  இருந்த  மியன்மார்  அகதிகள் 30பேர்  அங்கிருந்து வெளியேறிய  நிலையில்    இலங்கை கடற்படை உதவியுடன் காங்கெசந்தறை கடற்பரப்பில் வைத்து மீட்கப்பட்டனர்.

கடலில் தத்தளித்த மேற்படி அகதிகளை மீட்ட கடற்படை காங்கேசந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் மல்லாகம்  பதில் நீதிவானின் உத்தரவிற்கமை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை  சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வகதிகளிற்கு அரச மருத்துவ மனை  கடற்படை மருத்தவ பிரிவு மருத்துவ  பரிசோதனைகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் சில அமைப்புகள் மற்றும் தனியார் ஆடை நிறுவனம்  இவர்களுக்கான உணவு மற்றும்  உடைகளை வழங்கியுள்ளது.