முன் அறிவித்தலின்றி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்வேலை நிறுத்தப்போராட்டத்தை எவ்வித அறிவித்தலுமின்றி,மிண்டும் ஆரம்பிக்கப்படலாம் என பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 24 முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டம் பிரதமர் ரணில் விக்ரமிசிங்க உடனான பேச்சுவார்தைகளின் பின்னர் கைவிடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை எழுத்து மூலம் பிரதமரின் செயலாளர் வழங்கியதாக, பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் வராத்திற்குள் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், முன் அறிவித்தல் இன்றி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ட்ட கடிதத்திலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.