பொதுபல சேனாவின் அதிகாரி டிலந்த விதானகே ஏன் அடிக்கடி ரவியை சந்திக்கிறார்பொது பல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே அமைச்சர் ரவி கருணாநாயக்கவின்அமைச்சுக்கு அடிக்கடி செல்வதன் மர்மம் என்ன என்பதை அவர் தெளிபடுத்த  வேண்டும் என கோரிக்கைமுன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது..

அண்மைக்காலமாக பொது பல சேனா அமைப்பின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவற்றின்  பின்னால் இவ்வரசு ஒளிந்திருக்கின்றது என்ற விடயம் பல வழிகளில் நிரூபணமாகி கொண்டிருக்கின்றது.

அந்த வரிசையில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை  பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே அண்மையில்  ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் சந்தித்துள்ளதாக  அறிய முடிகிறது.

கடந்த 19-05-2017ம் திகதி வெள்ளிக்கிழமை கூட டிலந்த விதானகே  அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சுக்குள் அமைச்சரை  சந்திப்பதற்காக சென்றுள்ளார். இது பொய் என்றால் தான் டிலந்த விதானகேயை சந்திக்கவில்லையென ரவி மறுப்பறிக்கை வெளியிட வேண்டும்.அவர் மறுப்பாராக  இருந்தால், நாம் அவருக்குஎதிராக  முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய தயாராக உள்ளோம் அன்றைய  தினம் அவரது அமைச்சில் உள்ள சீ.சீ.டீ.வி பதிவுகளை அவர் வெளிப்படுத்த நேரிடும்.

பொதுபல சேனா அமைப்பின் பிரதான நபர்  எதற்காக அடிக்கடி ரவி கருணாநாயக்கவை சந்திக்க வேண்டும் ? அடிக்கடி இவர் ரவி கருணாநாயக்கவின் அமைச்சினுள் செல்வதானது இவர்கள் ஏதோ வியாபாரம் செய்ய வேண்டும் அல்லது ஏதோ ஒரு விடயத்தை திட்டமிட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே ஞானசார தேரருக்கும் தமிழ் டயஸ்போராவுக்கும் உள்ள தொடர்பு  விடயமாக கடந்த காலங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் கசிந்தன.ரவி கருநாயக்க ஊடாகவே பொதுபல சேனா டயஸ்போராவுடன்தொடர்பானதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.அது தவிர ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த ஞானசார தேரரை அவர்களே செட்டப் செய்து அனுப்பியதாக விமர்சனம் உள்ளது எனதுவிமர்சனங்களுக்கு ரவி கருநாயக்க பதில் அளிக்கா விட்டால் அவர் மீதான  இந்த விமர்சனங்கள் உண்மை என்றேநாம் கருதவேண்டிவரும்.

டிலந்த என்ன ரவியை சந்திப்பதற்காக அடிக்கடி அமைச்சுக்குள் வருகிறார் என்ற விடயத்தை ரவிகருணாநாயக்கவின் உடனடியாக வெளிப்படுத்தி இந்த நாட்டை அழிவு  பாதைக்கு இட்டுச் செல்லும் நிகழ்வுகளில் பின்னால் தான் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் ஊடக பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.