ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தின் நீண்ட தேவையினை தீர்த்து வைக்க சமூகத்தில் எவரும் இல்லையா.?ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

(வீடியோ).,

வீடியோ ஹிஜ்ராவின் அவலநிலை: -

www.youtube.com/watch?v=g5GHrMJP594&feature=youtu.be

கல்குடா ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தில் 1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையானது தற்பொழுது புதிய கல்வி சுற்று நிரூபத்தின் கீழ் ஊட்டல் பாடசாலையாக இருந்து வருக்கின்றது. பிரதேசத்தில் மிகவும் வறுமை கோடிற்கு கீழ் வாழுக்கின்ற மக்கள் மத்தியில் பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள இப்பாடசாலையானது ஆரம்ப சிறார்கள் ஆரோக்கியமாக கல்வி கற்பதற்கான இடம் பற்றாக்குறை, திறந்த வெளியில் காலை நேர உடற்பயிற்சிகள் செய்ய முடியாத நிலை, மற்றும் கல்வி கற்பதற்கான ஒழுங்கான கட்டட வசதி இன்மை, சிறார்கள் விளையாடுவதற்கு ஓர் திறந்த வெளி இன்மை அல்லது போதிய இடம் பாற்றாக்குறை போன்ற பல குறைபாடுகளை பற்றி ஆரம்பிக்கப்பட்ட 1988ம் ஆண்டு தொடக்கம் பிரதேசத்தில் எவரும் கேட்பார் பாற்பார் அற்ற நிலையில் தன்வசம் வைத்தே வருகின்றது.
அன்று தொடக்கம் இன்று பாடசாலையின் அதிபர்களாக இருந்த எம்.சி.எச்.மொஹம்மட் மற்றும் ஏ.எல்.எம்.ஜுனைட் போன்றவர்கள் பல முயற்சிகளை பல கோணங்களிலும் எடுக்க முயற்சித்தும் அவைகள் கைகூடாமல் போனமை பாடசாலையின் வளர்ச்சி படியில் ஏற்பட்ட துரதிஸ்ட்டவசாமான சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. அவர்களுக்கு பிற்பாடு பாடசலையின் அதிபாராக கடமை ஏற்ற ஜனாபா செய்னம்பு ஹமீட் ஒரு வினைத்திறன்மிக்க அதிபராக செயலாற்றுவதோடு பாடசலைக்கு இட பற்றாக்குறையாகவும், தேவையாகவும் இருக்கும் இடத்தினை பூர்த்தி செய்வதற்காக பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் இடத்தினை கொள்வனவு செய்யும் விடயத்தில் பாடசலை அபிவிருத்தி சங்கம், பெற்றார்கள், நலன் விரும்பிகள், புத்திஜீவிகள், உலமாக்கள் என கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களும் சென்று பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.
பல வருடங்களாக குறித்த இடத்தினை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி செயற்பட்டு வரும் பாடசாலையின் தறபோதைய அதிபரின் முயற்சியும் கைகூடாத நிலையில் 35 தொடக்கம் 40 இலட்சங்கள் பெறுமதியான குறித்த இடத்தினை பெற்றுக்கொள்வதற்கு சமூக சிந்தனையாளர்கள், தனவந்தர்களின் உதவிகள் இந்த புனித ரமழான் மாதத்தில் மிகக் கட்டாயமாக ஓட்டமாவடி ஹிஜ்ரா ஊட்டல் பாடசாலைக்கு தேவையான விடயமாக இருக்கின்றது.
அதன் அடிப்படையில் சென்ற கிழமை இதன சமூகமயப்படுத்தி கல்குடா பிரதேசத்து மக்களுக்கும், ஏனைய பிரதேசத்து சகோதர உள்ளங்களுக்கும் தெளிவுபடுத்துவதோடு குறித்த பாடசலையில் கல்வி கற்கின்ற சிறார்களினுடைய உளரீதியான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இட பற்றாகுறையினை  நிவர்த்தி செய்து தரும்படியிலான சமூகத்தினை விளிப்பூட்டுபடியான கூட்டம் கடந்த வியாழக்கிழமை மாலை பாடசலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இராப்போசன விருந்துபசாரத்துடன் இடம் பெற்றது.
ஆகவே அல்லாவிற்கு மிகவும் விருப்பாமன நிலையான தர்மம் என்ற வகையில் ஓட்டமாவடி ஹிஜ்ரா ஆரம்ப ஊட்டல் பாடசலைக்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்ற இட பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து கொடுப்பது கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற ஒவ்வொருத்தரினதும் கடமையாகும் என்பதனை பாடசாலை சமூகமும், நிருவாகவும் ஞாபகப்படுத்தி கொள்ளும் அதே நேரத்தில் உதவிகளை இந்த ரமழான் மாதத்தில் குறைவில்லாமல் வாரி வழங்கி பாடசாலையின் தேவையினை பூர்த்தி செய்துதருமாறு வேண்டி நிற்கின்றது. அதன் காணொளியானது இங்கே எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.