தெற்கிலிலிருந்து ஆரம்பித்த இனவாதத்தை இறைவன் தண்ணீர் கொண்டு சோதிக்கிறான்!அளுத்கம மற்றும் காலி உள்ளிட்ட பல பகுதிகளில் இனவாதிகள் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும் இடங்களுக்கும் அநியாயம் செய்தனர். இன்னும் பலதை செய்ய திட்டமிட்டனர் அதற்கிடையில் இறைவன் முந்திவிட்டான்.

மழை வெள்ளம் வராமல் இருந்திருந்தால் பாரிய இனக்கலவரம் ஒன்று வெடித்திருக்கும், நாளுக்கு நாள் வர்த்தக நிலையங்கள் தாக்கப்படுதல் பள்ளிவாசல் தாக்கப்படுதல் என்ற செய்திகளை கேட்ட நம்மை நாளுக்கு நாள் வெள்ளத்தால் உயிரழந்த நம் சகோதரங்களின் எண்ணிக்கையை கேட்க செய்தான் - அல்லாஹூ அக்பர்.

மழைக்கும் வெள்ளத்திற்கு சிங்கள - முஸ்லிம் என்று தெரியாது, இறைவனின் சோதனைகள் இப்படித்தான் வரும், இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

அதிகம் துஆ செய்யுங்கள் - இயன்றவரை ரமழானில் உதவிடுங்கள்