May 3, 2017

ஞானசாரரை அடக்கி வாசிக்குமாறு ரணில் உத்தரவு!


 
 
 
மே,தினத்தை முன்னிட்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான காலிமுகத்திடலில் ஒன்றுகூடிய மக்கள் வெள்ளத்தின் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தடுமாற்றம் அடைந்துள்ளது.

மஹிந்தவிடமிருந்து அதிகாரத்தை பிடுங்க ரணில் அவர்களின் ஆயுதமாக பயன்படுத்தப்பட்ட ஞானசார தேரர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மேட்கொண்டுவரும் வெளிப்படையான விமர்சனம் காரணமாக தமிழ்,முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்லாது சிங்கள மக்கள் மத்தியிலும் ஞானசாரவின் நடவடிக்கை தொடர்பில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. 

மைத்திரி, ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசுக்கு எதிரான எழுச்சியாக, மஹிந்தவின் காலிமுகத்திடல் மே,தின கூட்டம் பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து வெளியிடும் நிலையில், எதிர்வரும் தேர்தல் குறித்தான அச்சம் நல்லாட்சி அரசாங்கத்தை சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பெரும்பான்மையின் பேராதவைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து, சிறுபான்மை சமூகங்களை பிரித்தாலும் தந்திரத்தை பாவித்து நல்லாட்சியின் ஆயுளை நீடிக்கச் செய்யும் ஆசையில் இருந்த நல்லாட்சிக்கு காலிமுகத்திடலில் ஒன்றுதிரண்ட மக்கள் வெள்ளத்தின் பின்னர் அவ்வாசை நிராசையாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சிறுபான்மை சமூகத்தின் நெஞ்சங்களில் இருந்து மஹிந்த என்ற நாமத்தை மறக்கடிக்க செய்ய கொண்டுவரப்பட்ட ஞானசார என்பவர் நல்லாட்சியில் செய்துவரும் அட்டகாசங்களால், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் நல்லாட்சியில் கொண்ட நன்மதிப்பு குறைந்துவரும் நிலையில், ஆளும் அரசாங்கமும் அதற்கேற்ப முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களில் நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்க தவறியுள்ளது.
இதன்காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நல்லாட்சி மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது மக்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்டியிருப்பதானது நல்லாட்சியை மேலும் ஆட்டம்காணச் செய்துள்ளதும், இச்சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ச அவர்கள் நல்லாட்சிக்கு விடுத்திருக்கும் சவாலை ஏற்று உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தினால், ஆளும் அரசு மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள அதிர்ப்தி காரணமாக மஹிந்தவுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் திரும்பி விடுவார்கள் அதன் காரணமாக தனது பிரதமர் பதவிக்கு அபத்து வந்துவிடும் என்ற அச்சம் ரணில் அவர்களை சூழ்ந்துள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத, அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து ஞானசாரவை ஒதுங்கி நிற்குமாறு ரணில் நிச்சயமாக  உத்தரவிடுவார், மட்டுமல்லாது முஸ்லிம்களுடைய விவகாரங்களில் அவசரமாக தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்கவும், முடிவுக்கு கொண்டுவருவதற்கும் ரணில் அவர்கள்  முன்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எவ்வாறான போதிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களுடைய விடயத்தில் குற்றம் அற்றவர் என்பதை முஸ்லிம்கள் கடந்த இரண்டு வருட நல்லாட்சியின் செயற்பாடுகள் மூலம் கண்டு தெளிவு பெற்றுவிட்டனர். மேலும் மஹிந்த அரசாங்கத்திலிருந்த சம்பிக்க ரணவக்க போன்றோருடன் இப்போது ஐக்கிய தேசிய கட்சியிலும் சுதந்திர கட்சியிலும் உள்ளவர்களில் யார்? யார்? முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத சிந்தனை உடையவர்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. முஸ்லிம்கள் இனி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான உறவை அதிகப்படுத்தினால் இனவாதிகளின் அரயல் அஸ்தமனமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அஹமட் புர்க்கான்
கல்முனை
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post