கல்குடாவில் - மதுபான ஆலை நிர்மாணிப்புக்கு தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்ப்பு ஆர்பாட்டம்.WM Mendis & Company க்கு எதிராக SLTJ - மட்டக்களப்பு மாவட்டம் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மதியம் 01.00 மணிக்கு ஓட்டமாவடி பிரதான வீதியில் நடைபெற்றது. 

சிறப்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தை ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் - மட்டக்களப்பு மாவட்டம் ஏற்பாடு செய்திருந்தது. ஜமாத்தின் துணை செயலாளர் கபீர் மற்றும் மாவட்ட சமூகசேவை செயலாளர் சலாஹுத்தீன் ஆகியோர் கோஷங்களை எழுப்பினார்கள். 

தவ்ஹீத் ஜமாத் தலைவர் சகோ. ரஸ்மின் MISc தமிழ் மொழியிலும் ஜமாத்தின் பேச்சாளர் சகோ. அப்துர் ராஸிக் B.Com அவர்கள் சிங்களம் மற்றும் ஆங்கில மொழியிலும் மதுபான ஆலைக்கு எதிரான கண்டன உரைகளை நிகழ்த்தினார்கள். 

ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் பவுத்த மத குருவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். - அல்ஹம்து லில்லாஹ்.