முஸ்லிம் பிரசேசங்களில் பிரபலமான "பாலாப்பம்"; எமது பாரம்பரிய உணவு

கிழக்கின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒரு காலத்தில் அதிகாலை சுபஹ் தொழுத பின்னர் சிறிய சிறிய தேநீர் கடைகளிலும், வயலோர கடைகளிலும் ஒரு சில வீடுகளிலும் கிடைக்கும் பால் அப்பம்.

சீனி துாவிய பாலப்பம் எத்தனை சாப்பிட்டாலும் பசி தீராது, பால் அப்பமும் மில்க்மெயிட் சாயம் கூடிய டீயும் குடித்தால் போதும் தெம்பு கிடைத்து விடும்.

இன்று பல விடயங்களை நாம் இழந்துவிட்டோம், எமது பாரம்பரிய உணவுகள் கிடைப்பதில்லை, இந்த பாலப்பம் போல.சுரட்டை மேல் அடுக்கிய பால் அப்பம் இன்று கிடைப்பதில்லை என்ற கவலையை நீங்கியது . அட்டாளைச்சேனை தைக்காநகரில் மையவாடிக்கு அருகாமையில் பாபு னானவின் கடையில் அதிகாலையிலும், மாலை நேரங்களிலும் இந்த பாலப்பம் கிடைக்கிறது. பாரம்பரிய உணவு முறைகளை மறவோம், காப்போம்.