காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் !தற்போது நாம் நினைத்த நேரத்தில் ஆட்சியை கவிழ்க்க முடியுமான சூழல் தோன்றியுள்ளது,ஆனால் நாம் சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

2017ம் ஆண்டு  ஆட்சியை கவிழ்ப்பதாக  கூறியமை தொடர்பில் திவயின நாழிதழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்  அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்...

தற்போது  நாட்டில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது ஆட்சி கவிழ்க்கும் அந்த தருணத்தை நோக்கி விடயங்கள் நகர்வதை அனைவராலும் உணர்ந்துகொள்ள முடியும்.அதிகாரம் எவ்வாறு கைமாறும் என்பது தொடர்பில் என் அளவுக்கு அறிந்துவைத்துள்ள எவரும் இருக்கமுடியாது. எம்மிடம் இருந்து ஆட்சி சொல்லிவிட்டுநழுவிச்செல்லவில்லை.கடந்த ஜனாதிபதி தேர்தலில் உத்தியோகபூர்வ முடிவு வரும் முன்னமே நான் வீட்டுக்குசென்றுவிட்டேன்.

தற்போது எங்களுக்கு கைகளுக்கு பிடி வந்துள்ளது.எந்த நேரத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை மேற்கொண்டுஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற விடயத்தை நாம் மிக நுனுக்கமாக கையாழ்கிறோம்.சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு ஆட்சியை மாற்றுவோம்.

நான் ஜனநாயகத்தை மதிக்கும் தலைவன் என்ற வகையில் இந்த விடயத்தை மிகவும் கவனமாக அனுகுகிறேன் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.