ஞானசார கைது செய்யப்படுவாரா? முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்தனர்எஸ். ஹமீத்

அமைச்சர்களான  ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் மா அதிபருடன் ஓர் அவசர சந்திப்பைச் சற்று முன்னம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் சட்டம், ஒழுங்கை உடனடியாக நிலை நாட்டுமாறு கோரியும் ஞானசாரரைக்  கைது செய்யும்படி வேண்டியும் பொலிஸ் மா அதிபரை இவர்கள் வலியுறுத்தி எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைத்ததோடு, பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் புகார் ஒன்றினையும் இவர்கள் பதிவு செய்துள்ளனர்.

மேலும், பொலன்னறுவை மற்றும் தோப்பூர் அசம்பாவிதங்கள், கோகிலவத்தைப் பள்ளிவாசல் தாக்குதல், மாயக்கள்ளி மலை விவகாரம், லாஸ்ட்  சான்ஸ்  தீ விவகாரம்  ஆகியன பற்றியும் போலீஸ் மா அதிபருடனான சந்திப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.