சவூதியின் தலைமை இமாம் உடல்நிலை குறித்து பரவும் வதந்திக்கு மறுப்பு !சவுதியின் தலைமை இமாம் முஃப்தி. ஷேக் அப்துல் அஸீஸ் அல் ஷேக் அவர்களின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திக்கு மறுப்புத் தெரிவித்து மூத்த மார்க்க அறிஞர்களின் பொதுச் செயலகம் (The General Secretariat of the Senior Scholars’ Council) மறுப்பு தெரிவித்துள்ளது. இமாம் அவர்கள் வழமைபோல் கடமையாற்றி வருவதாகவும், தனது காரியாலயத்தில் பார்வையாளர்களை சந்திப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.