சிங்கள மக்களால் வெறுக்கப்பட்ட ஞானசாரவுக்கு ஊடகங்கள் முன்னுரிமையளிக்கிறது


பொதுபலசேனா அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர் ஞானசார தேரருக்கு உளத்துாய்மை கொண்ட எந்தவொரு பௌத்தரும் ஆதரவளிக்க மாட்டார்கள் காரணம் பௌத்த தர்மத்திற்கு எதிராக செயற்பட்டு வருகிறார், பிற உயிர்களை மதிக்க சொல்லிய பௌத்த மதம் உயிர்களை வஞ்சிப்பதையோ துாற்றுவதையோ சொல்லவில்லை.

அப்படியிருக்கையில் இனக்லவரங்களை துாண்டிய ஞானசார மக்கள் மத்தியில் செல்வாக்கின்மையால் கூலிக்கு ஒரு படையை உருவாக்கி அடிதடிக்கு ஒருசிலர் சமூகவலைத்தள பிரச்சாரத்திற்கு ஒரு சிலர், மாவட்ட ரீதியிலான ஏஜெண்டுகள், ஊடகங்களை தன்வசமாக்க ஒரு சிலர் என வேறு வேறாக இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பிரபலம் தேடுகிறார். இவருக்கு இவயைனைத்தையும் செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கிறது?

ஞானசாரவுக்கு சிங்கள் மக்கள் பெரிதும் ஆதரவு என பலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளோம் அப்படியிருக்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஞானசாரவுக்கு எத்தனை வாக்குள்? அவரின் கட்சிக்கு எத்தனை வாக்குகள்? ஒட்டுமொத்தமாக 6000 வாக்குளே அவர் பெற்றார்.

வெறும் வெற்றுப்பேச்சுக்களாலும் ஊடக பிரபலத்தாலும் தன்னை பெரியவராக காட்டும் ஞானசார ஊடக பிரபலம் இல்லாவிட்டால் யாரும் ஞானசாரவை கணக்கில் எடுக்க மாட்டார்கள். இதுதான் யதார்த்தம்.