குருநாகல பள்ளி மீது பெற்றோல் குண்டு வீச்சு; மீண்டும் ஒரு கலவரம் உருவாக வாயப்பு

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளை சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. (M)