அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி


தனியார் துறையினருக்கு, அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. தேசிய சந்தையில் அரிசியின் விலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கிலேயே, இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி தலைமையில், செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போதே மேற்கண்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. 
தேசிய நெற்பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நுகர்வோருக்கு வசதியான விலையிலும் அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையிலேயே அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 
Powered by Blogger.