மலையகத்தில் கடும் மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியான மழை காரணமாக பல வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்தும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நோட்டன் கொழும்பு, அட்டன் கொழும்பு, அட்டன் நுவரெலியா ஆகிய பிரதான வீதிகளில் பல இடங்களில்மண்திட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளனஒரு சில  இடங்களில் மண்திட்டு சரிவின் காரணமாக ஒரு வழிபோக்குவரத்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படுவதனால் வாகன சாரதிகள்அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிகாலை 4 மணியளவில் அட்டன் ஸ்டிரதன் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரு வீட்டில் பகுதியளவுசேதமாகியுள்ளதுஎனினும் குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் அயலவர்களின் வீட்டில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு பதுளை கொழும்பு புகையிரத பாதையில் அட்டன் மல்லியப்பு பகுதியில் சிறிய மண்சரிவுஏற்பட்டதனால் காலை நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா வரை செல்லவிருந்த புகையிரதம் சற்றுதாமதமாகியே சென்றுள்ளது.

நீரேந்து பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் க்ஸபானநவலக்ஸபான, காசல்ரி, மவுசாகலை, கெனியோன், விமலசுரேந்திர மேல் கொத்மலை, ஆகிய பிரதான  நீர்தேக்கங்களின் நீர் மட்ட சடுதியாக உயர்ந்து வருகிறது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக மலையகததின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளனஇதனால்மலைக்களுக்கும், மண்திட்டுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்  பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்மழை காரணமாக மலையக பாடசாலைகளின் மாணவர்களின வரவும் 26.05.2017 அன்றைய தினம் மிககுறைவாகவே காணப்பட்டனஇதனால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தன.

நகரங்களுக்கு பொது மக்களின் வருகை மழை காரணமாக குறைவாக காணப்பட்டதனால் வரத்தகநடவடிக்கைகளுக்கு பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பல இடங்களில் வெள்ள நீர் விவசாய நிலங்கள் மீது பாய்ந்துள்ளதனால் விவசாய காணிகளும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தொடர் மழை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிக குறைவாக் வேலைக்கு சமுகமளித்துள்ளமையினால்தேயிலை உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.