முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இப்தார் நாளைமறுதினம் இடம்பெறாது
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாளை (31) புதன்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வு  நாளைமறுதினம் இடம்பெறாது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மழைவெள்ளம்மண்சரிவுபோன்ற அசாதாரண காலநிலை தொடர்பான நிலைமையினைக் கருத்தில் கொண்டு இப்தார் நிகழ்வு நடைபெறவிருந்த தினத்தில் நடைபெறாது  என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வு மருதானை பூக்கர் மண்டபத்தில் தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் பங்களிப்புடன் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.