இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


இந்தோனேஷியாவின் தென் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலு தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. உயிர் சேதம் குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.