இந்தியாவில் ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் ஊடுருவல்: அரசு எச்சரிக்கை


இந்தியாவில் தாக்குதல் நிகழ்த்தும் நோக்குடன் 20 லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய லஷ்கர்- இ- தொய்பா தீவிரவாதிகள், நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடவுள்ளனர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையின் அடிப்படையில், நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற நகரங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது என நாட்டின் அத்தனை மாநிலங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.