மன்னாரிலும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான நடமாடும் சேவை

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்கங்களில் நேற்று இடம்பெற்ற சுயதொழில் புரிவோருக்கு உதவும் நடமாடும் சேவையைத்தொடர்ந்து இன்று காலை (2017.05.29) மன்னாரிலும் நடமாடும் சேவை இடம்பெற்றது.

தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்கமூட்டலுக்குமான இந்த விழிப்புணர்வுச் செயலமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (29) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான திணைக்களங்களினதும் நிறுவனங்களினதும் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.