ஆசிரிய இடமாற்றத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்- இலங்கை ஆசிரியர் சங்கம்(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் அண்மையில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் கல்முனைக் கல்வி வலயத்திலிருந்து இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம்.அஹுவர் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அண்மையில் ஆசிரியர் இடமாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது அதில் கல்முனை கல்வி வலயத்திலிருந்து இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள்வெளி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர் இடமாற்றம் வருடாந்த இடமாற்றம் எனச் சொல்லப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

ஆனால் இவ்வாறு வருடாந்த இடமாற்றம் நடைபெறுவதற்கான காலமாக இக்காலம்இல்லாமையினால் இதுவொரு அநீதியானதும் முறைகேடான இடமாற்றம் என்பதே எமது முடிவாகும். இது தொடர்பில்தான் நாம்  மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்குதீர்மானித்திருக்கின்றோம். 


ஆசிரியர் நலன் பற்றி எந்த அக்கறையையும்  எடுக்காமலும் அதே நேரம் மாணவர்களின் நலன்களை சீர்குலைப்பதாகவும் இந்த இடமாற்றம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ஆண்டு மாணவர்கள்ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ளமாணவர்கள் மற்றும் க.பொ.த சா.தாமாணவர்கள் என்று பல்வேறு தர மாணவர்களையும்பாதிக்கும் நிலையை இந்த தவறான இடமாற்றக் கொள்கை கொண்டு வந்துள்ளது.

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு நடந்திருக்கும் இந்த அநீதியான இடம் மாற்றம் குறித்து போதிய சட்ட ஆலோசனையைப் பெற்றிருக்கும் நாம் எதிர்வரும் வாரம் வழக்கு தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்திருப்பதாகவும் மேலும்  அவர் குறிப்பிட்டார்.