ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பருக்கு பாராட்டு விழாகல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாருமான, சட்டமுதுமானி, நிசாம் காரியப்பர் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமணம் பெற்றுள்ளமைக்கு கல்முனை மக்களால் ஆசாத் பிலாசவில் நடாத்தப்பட்ட பாராட்டுவிழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கல்முனை முகைதீன் பெரிய பள்ளிவாசல் தலைவர், டாக்டர் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எம்.எம். ஹரீஸ், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான ஆரிப் சம்சுதீன், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அப்துல் அசீஸ், அமைச்சரின் இணைப்புச்செயலாளர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் கல்முனை மாநகர சபை எதிர் கட்சித் தலைவர் ஏகாம்பரம், கட்சித் தொண்டர்கள், மக்கள் பிரதிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

ஷபீக் ஹுஸைன்