மஹிந்தவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!!நாடாளுமன்ற உறுப்பினர், மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையால் தொடரப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, பெற்றுக்கு கொண்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவை செலுத்தவில்லை என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த, சுசில் பிரேமஜயந்த, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு, திருத்தப்பட்டு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு எதிராக மஹிந்த சார்பில், அடிப்படை ஆட்சேபனையை தெரிவித்தனர்.

எனினும் வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிராக, மஹிந்த உள்ளிட்ட மற்றைய பிரதிவாதிகள் நால்வர் அடிப்படை ஆட்சேபனையை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.