யாழ்ப்பாணத்தில் கடைகடையாகச் சென்று நிவாரணம் கோரும் பொலிஸார்பாறுக் ஷிஹான்
 

இயற்கை அனர்த்தத்தினால் தற்போது நாடு பூராகவும்   பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தந்துதவுமாறு கோரி யாழ் நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொலிஸார் நிவாரண பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

யாழ்  மாவட்ட பிரதி  பொலிஸ் மா  அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய  இந் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி இடம்பெறுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் எதிர்வரும் யூன் 1ஆம் நாள்வரை யாழ்ப்பாண பொலிஸ்   நிலையத்திலோ யாழ் மாவட்ட பிரதிக் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலோ பொருட்களை வழங்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.