புனித நோன்பு ஆரம்பமும் ரிசாதின் வேண்டுகோளும்(Ashraff.A.Samad)
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஒருசில இனவாதிகளால் ஏட்படுத்தப்பட்டுள்ள துவேஷ மனப்பான்மை நீங்கி, மக்கள் மத்தியில் உள்ள பதட்ட நிலைமை அகலவும் இந்த நாளில் பிரார்த்திப்போம்.
நாட்டில் அரங்கேறிவரும் அசாதாரண நிலைமை தொடர்பிலும் திடீர் வெள்ள அனர்த்தம் தொடர்பிலும் கடைபிடிக்கவேண்டிய முறைகள் குறித்து
கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் ரிஷாத் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு,
புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும் வணக்க வழிபாடுகளையும் பயன்படுத்திக்கொள்வோம்.
நோன்பு திறக்கும் வேளைகளை வசதி குறைந்த குடும்பங்களுடன் இணைந்து எமது நோன்பு திறக்கும் சந்தர்ப்பத்தை மிகவும் எளிமையான முறையில் அமைத்துக்கொள்வோம்.
ஆயிரம் மாதங்களை விட மேன்மைமிக்க மாதமாக கருதப்படும் இந்த ரமழான் மாதத்தில் எமது சமுகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளும் அட்டூளியங்களும் ஒழிந்து போக இறைவனிடத்தில் இருகரம் ஏந்துவோம்
2014 ஆம் ஆண்டு நோன்பு எமது சமுகத்தை பொறுத்தவரையில் அச்சமும் இருளும் பயங்கரமும் நிறைந்ததாக இருந்ததை நாம் மறக்கமாட்டோம். அதேபோன்ற நிலையை இந்த வருடத்திலும் ஏட்படுத்த இனவாத குழுக்கள் முயட்சி செய்வதை தடுத்து நிறுத்த என்னாலான அணைத்து பங்களிப்பையும் வழங்க தயாராகவுள்ளேன்.
இன்ஷா அல்லாஹ், பொறுமையைக்கொண்டும் நல் அமல்களைக்கொண்டும் இனவாதிகளின் சமூகத்துக்கு எதிரான சதிகள் அழிந்து போக பிரார்த்திப்போம்.
இந்த தருணத்தில், வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் துயரத்தை ஏட்படுத்தியுள்ளது. முடியுமான அளவு அம்மக்களின் கஷ்டத்திலும் துயரத்திலும் பங்கெடுத்து ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குமாறு பகிரங்கமாக கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே எம்மை அடைந்துள்ள இந்த ரமழான் மாதத்தை இறைவனுக்கு பொருத்தமான முறையில் பயன்படுத்தி இரவு நேர வழக்க வழிபாடுகளில் தம்மை அர்ப்பணித்து ஏழை எளியவர்களுக்கு தர்மங்களைச் செய்து இம்மாதத்தில் அதிக நன்மைகளை ஈட்டிக்கொள்வோம் என வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வாழ் முஸ்லிம் சகேதரர்களிடமும் அமைச்சர் ரிசாத் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.