பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தின் - மென்செஸ்டர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான தாக்குதல்கள் அங்கு நடத்தப்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கியமான இடங்களுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று மென்செஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். அமெரிக்க பொப் பாடகர் ஒருவரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 22 பேர் பலியானதுடன், 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைதாரி சல்மன் அபேடி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேநேரம் இந்த தாக்குதலை அடுத்து சிலர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.