வெள்ளத்தில் தாண்டுபோனாரா ஞானசார? மழையால் மறைக்கப்பட்ட கைதுக்கதைநாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பிரதேசங்களில் மழையும் மண்சரிவும் இடம்பெற்று வருகிறது. இதன்காரணமாக பல உயிர்களும் உடமைகளும் இழக்கபட்டு அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ள இத்தருவாயில் நேற்று கைதாவார் இன் கைதாவார் என்ற கதைகள் மாறிவிட்டது. யார்? ஞானசாரதான்.

பொதுபலசேனாவின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் மறைவாக உள்ளதாகவும் அவரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் பணியி் இருப்பதாகவும் சொல்லிய பொலிஸ் தலைமையகம் ஆனாலும் இதுவரை ஞானசார கைது செய்யப்படவில்லை. அதற்கிடையில் இயற்கைச் சீற்றம் .இடம்பெற்றுள்ளது.

மண்சரிவும் மழையும் பல உயிர்களை தெற்கிலும் மேல் மாகாணத்திலும் காவு கொண்டது, இந்த காலநிலை மாற்றத்தில் ஞானசார தேரர் மறக்கடிக்கப்பட்டார், இது இறைவனின் செயலாக கூட இருக்கலாம்.

இது நல்லதொரு காலப்பகுதி காரணம் பெரும்பான்மை பௌத்தர்களுக்கு நாம் உதவ முடியும், இதனால் நல்லிணக்கம் கட்டியெழுப்ப முடியும் இன்சா அல்லாஹ் அதனை செய்வோம். ஞானசாரவை மறப்போம். அவருக்கு இறைவன் ஹதாயத் வழங்கட்டும்.