எங்கள் கைகள் அல்குர்ஆனை மட்டுமே ஏந்தும்; ஒருபோதும் ஆயுதம் ஏந்தாதுஇஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம் இதில் எந்தவித சந்தேகமும் இல்லை, இஸ்லாம் சமாதானத்தை அதிகம் விரும்பும் மதம் அப்படியிருக்கையில் ஏன் முஸ்லிம்கள் மீதான அதிக வன்முறை அள்ளிவீசப்படுகிறது. ஒன்றில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை அல்லது, வேண்டுமென்ற திட்டம் ஒன்று நிறைவேற்றப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளை ஒழித்தகையோடு முஸ்லிம்கள் மீது அதிக வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள தேசியம் கடந்த அரசாங்கத்தில் அதிகம் தலைவிரித்து ஆடியது, இதனால் முஸ்லிம்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து அல்லல்பட்டனர். இந்த இனவாத மனநோயை இல்லாதொழிக்க புதிய அரசை தேர்வு செய்தனர் சிறுபான்மை முஸ்லிம்கள், இந்த கொடிய நோய் தீர்ந்துவிடும் என்ற நப்பாசையில் இருந்த நம்மை மீளவும் இந்த நோய் பீடித்தது. 

மஹிந்த அரசில் தலைவிரித்தாடிய அதே பொதுபலசேனா, ராவண பலய, சிங்கள ராவய, சிங்கலே போன்ற அனைத்து அமைப்புக்களும் மீளவும் தங்கள் நடவடிக்கையை தொடர்ந்தது, இன்று வரை தொடரும் இந்த இனவாத நோய் நிறுத்தப்படவில்லை முஸ்லிம்களை உளரீதியாக தாக்கும் இக்கும்பல் எதையோ முஸ்லிம்களிடத்தில் அதிகம் எதிர்ப்பார்க்கின்றது,

அதிகமதிகம் தீவிரவாதிகள் என்று அறிக்கை விடும் இந்த அமைப்புக்கள் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என எதிர்பார்க்கின்றனர், ஐ.எஸ் ஆதரவாளர்கள் இலங்கையில் இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர் இதனை தொடர்ந்து பார்த்திருக்க முடியாமல் சிலவேளை நம் இளைஞர்கள் அவசரப்படலாம். இறைவன் காப்பாற்ற வேண்டும். இந்த விடயம் தான் அவர்கள் எதிர்பார்ப்பது.

எங்கள் கைகள் அல்குர்ஆனை மட்டுமே ஏந்தும், எங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பே இ்ல்லை அப்படி இஸ்லாம் கூறவும் இல்லை, என சொல்லிக்காட்டவேண்டும். நபியவர்களை கொல்ல வந்த உமரே இஸ்லாத்தை தழுவினார் ஞானசாரவுக்கும் இறைவன் ஹிதாயத் வழங்குவான் இன்சா அல்லாஹ் பிரார்த்திப்போம். கவனமாக நடப்போம்.

பஹத் ஏ.மஜீத்
பிரம ஆசிரியர்