May 8, 2017

 நிலக்கரி மின்சக்தி நிலையங்கள்: ஜனாதிபதி அனுமதி




நிலக்கரி மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கு, இதுவரை காலமும் எதிர்ப்பு வெளியிட்டுவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது அதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என, பொறியியலாளர்களின் சங்கச் செயலாளர் அநுர வன்னியாராச்சி தெரிவித்தார்.

அமைக்கப்படும் மின்சக்தி நிலையங்கள், சூழலைப் பாதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, கடந்த புதன்கிழமையன்று, இந்த அனுமதியை அவர் வழங்கினார் என்று, அநுர மேலும் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின், மின் பொறியியலாளர்களின் சங்கத்துடன், ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பின் போதே, அவர் இந்த அனுமதியை வழங்கினார் என அறிவிக்கப்படுகிறது.

 சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், நிலக்கரி மின்சக்தி நிலையங்களை அமைக்க முடியுமென, தங்கள் சங்கம் குறிப்பிட்டதையடுத்து, இந்த அனுமதியை, ஜனாதிபதி வழங்கினார் என, அநுர குறிப்பிட்டார். இலங்கை மின்சார சபையின், நீண்டகால மின்சார உற்பத்தித் திட்டத்தில், நிலக்கரி மின்சக்தி நிலையங்களை அமைப்பதும் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை, நீண்டகால மின்சக்தி உற்பத்தித் திட்டம் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், அந்தத் திட்டம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பரிஸ் உடன்படிக்கையில், இலங்கை கைச்சாத்திட்டுள்ள நிலையில், காபன் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டிய பொறுப்பு, இலங்கைக்கு உண்டு. அத்தோடு, கடந்த செப்டெம்பரில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, நாட்டில், புதிய நிலக்கரி மின்நிலையங்களை அமைப்பதற்கு எதிரான தீர்மானமொன்றை, அரசாங்கம் எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network