கம்பளையில் குழந்தையுடன் கடத்தப்பட்ட இளைஞர் விடுவிப்பு; பொலிசார் தீவிர விசாரணைம்பளை நகரில் 2 வயதும் 8 மாதங்களுமான குழந்தையுடன் கடத்திச் செல்லபட்ட 26 வயது இளைஞர், கப்பம் கோரிய கும்பலால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கும்பல் கண்டி பிரதேசத்தில் அந்த இளைஞரை விடுவித்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த இளைஞரிடம் பெற்றப்பட்ட தகவலுக்கு அமைய அந்த குழந்தையை தேடுவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட 3 விஷேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவலுக்கு அமைய கொழும்பு மற்றும் காலி பிரதேசத்தையும் மையமாக கொண்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.