தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும்: இந்திய ரயில்நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ்




ஒட்டு மொத்த இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் வந்த இ-மெயிலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வரும் யூன் மாதம் முதல் தொடர் குண்டுகள் வெடிக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் மிகுந்த விழிப்பு உணர்வுடன் இருக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மட்டுமின்றி சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து உடனடியாக ஆர்.பி.எஃப் மற்றும் ரயில்வே பொலிசாரிடம் பயணிகள் எந்நேரமும் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய ரயில்வே முனையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் அமைப்பினர் பெயரில் வந்துள்ள இந்த மிரட்டல் இ-மெயில் குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்னை பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.