ரியாதில் துப்பாக்கிச் சூடு; இரு ஆசிரியர்கள் பலி!ரியாத் பாடசாலையொன்றில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட பழைய மாணவன் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன் குறித்த நபர் சவுதி அரேபியா பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.