இந்தியாவில் தொழுகைக்கு சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல்; ஒருவர் பலிஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் தொழுகைக்கு சென்று திரும்பிய முஸ்லிம் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

உத்திர பிரதேசம் மாநிலம் குண்டா மாவட்டத்திலுள்ள ஷாகிப்கஞ்சி பகுதி மசூதியில் ரமலான் மாதத்தை முன்னிட்டு நேற்றிரவு தராவீஹ் தொழுகை நடந்தது இது ரமழான் மாதம் முழுவதும் நடைபெறும்
இந்நிலையில் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் மீது கூர்மையான ஆயுதங்களை கொண்டு இந்துத்துவ பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைத்துள்ளார். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநத் வந்து சென்ற சில மணி நேரங்களில் இச்சம்பவம் நடத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் தலித்கள் மீதும், முஸ்லிம்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது