இந்திய விமானப்படை போர் விமானம் மாயம்


இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானங்களில் ஒன்றான சுகோய் 30 திடீரென்று மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூரில் விமானப்படைத் தளத்தைச் சேர்ந்த வீரர்கள் சகோய் 30 ரக போர் விமானத்தில் பயற்சி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென அந்த விமானம் ரேடார் கண்காணிப்பிலிருந்து மாயமானது. தேஜ்பூரிலிருந்து 60 கி.மீ. வடக்கில் பறந்துகொண்டிருந்த போது விமானம் காணாமல் போயிருப்பதாக விமனாப்படை தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் எத்தனை வீரர்கள் பயணித்தனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மாயமான விமானத்தைத் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.