ஞானசார தேரர் உண்ணாவிரத போராட்டத்தில்



பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் இன்று மாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாக பொதுபல சேனா ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கண்டி மல்வத்து விஹாரையிலேயே அவர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பிடியாணையின்றி தன்னை பொலிஸார் கைது செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

என்றாலும் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிக்கும் நோக்கிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இனவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிவில் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.