இனவாத மதவாத தாக்குதல்களை தடுக்க விசேட பொலிஸ் பிரிவு

May 25, 20170 commentsஇனவாத மற்றும் மதவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்த விசேட பொலிஸ் பிரிவு ஒன்று உருவாக்கப்பட உள்ளது.இனவாத மதவாத அடிப்படையில் வேற்று மதத்தவர்களை துன்புறுத்தும் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமிட்ட கும்பல்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பூரண அதிகாரத்துடன் கூடிய விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.
அரசாங்கம் இந்த விசேட பொலிஸ் பிரிவினை உருவாக்க தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கீழ் இந்த விசேட பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட உள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் இந்த பிரிவிற்கு உள்வாங்கப்பட உள்ளனர்.
மத வழிபாட்டுத் தளமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உடனடியாக அந்த இடத்திற்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கடமையில் ஈடுபடுத்துவது, விசாரணை நடத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் ஆகியன இந்தப் பிரிவின் கடமைகளாகும்.
மத வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் நடத்தும் திட்டமிட்ட கும்பல்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிக்கை ஒன்று வழங்கப்பட உள்ளது.
மேலும், புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Share this article :