கிழிந்து தொங்கிய மாகாண சபை – ஊடகவியலாளரால் தலைநிமிர்ந்ததுபாறுக் ஷிஹான்

வடக்கு மாகாண சபையின் கைதடியிலுள்ள வளாகத்தில் நாட்டப்பட்டிருந்த வடக்கு மாகாணக் கொடி கிழந்து போய் பல நாட்களாகத் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. 

வடக்கு மாகாண சபையின் இன்றைய 93 அமர்விற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர் ஒருவர் இன்று (25) காலை அதனைப் படம்பிடித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 

மாலை அமர்வு முடிந்து வெளியில் வந்து பார்த்தபோது மாகாண சபையின் புதிய கொடி ஒன்று பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருந்தது.