மாநாட்டு அலுவலர்களாக கடமையாற்றியவர்களை பாராட்டும் நிகழ்வுஇலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கடந்த வருடம் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடாத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாட்டில் அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கான மாநாட்டுப் புத்தகப் பொதி அடங்கிய பைகள் வழங்களும் நிகழ்வும், பராட்டு வைபவமும் அன்மையில் கொழும்பு யாழ் ஹோட்டலில் இராப்போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்றது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும், மூத்த எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர் நாச்சியாத்தீவு பர்வின் ஆகியோரினால் மாநாட்டு அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கான மாநாட்டுப் புத்தகப் பொதி அடங்கிய பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், மாநாட்டு வெளிநாட்டுப் பேராளர்களது நலனைக் கவனித்துக் கொண்டு தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பினை திறம்பட செய்து நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியமைக்காக திரு. க. மங்களேசன் அவர்கள் இந்நிகழ்வில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்
.