அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் விபத்துஅக்கரைப்பற்றிலிருந்து அம்பாறை நோக்கி சென்ற Ambulance மோட்டார் சைக்கிளுடன் மோதி இறக்காமத்தில் விபத்துக்குள்ளாகியதாக இறக்காமத்திலிருந்து எமது செய்தியாளர் சன்சீர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் , Ambulance அதிக வேகமாக வந்ததினால் வேகக் கட்டுப்பாட்டை  மீறி இவ் விபத்து இடம்பெற்றதாக தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு அதில் பயணித்தவர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் தற்போது தமண பொலிஸ் விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.