சாய்ந்தமருது முபா பௌண்டேசனுக்கு கணணி கையளிப்புசாய்ந்தமருது பிரதேசத்தில் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்ற முபா பௌண்டேசன் அமைப்புக்கு நீண்ட கால தேவையாகவிருந்த கணினி ஒன்றினை அவ்வமைப்பின் தவிசாளரும், தபால் அதிபருமாகிய எம்.எம்.ஏ முபாறக் அவர்களினால் விடுக்கப்பட வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினுடைய தலைவருமாகிய அல்ஹாஜ் ஏ. சீ. யஹியாகான் அவர்களினால் கையளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வின் போது யஹியாகான் பௌண்டேசன் அமைப்பினுடைய உபதலைவர்கலான எம்.எம்.ஆதம்வாபா, டீ.எல்.எம். இல்லியாஸ் மற்றும் பொருளாளரான ஏ.எம். நவாஸ் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.