விசாரணைக்கு வரவுள்ள ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு


ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டபோதே எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குக்கு எதிராக ஞானசார தேரர் சார்பில் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு நீதிபதியால் நிராகரிக்கப்பட்டு வழக்கு விசாரணையை முன்னெடுக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசரணையின் போதே ஞானசார தேரர் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது