முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான கடையின் மீது கை குண்டு தாக்குதல்
பாணந்துறையில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவரின் கடை  இன்று (17) அதிகாலை  இனந்தெரியாத நபர்களால்  தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலினால் குறித்த கடையின் கண்ணாடிகள்  சேதம் அடைந்துள்ளது என தெரிய வருகிறது. இந்த தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.