அரச காரியாலய கடமை நேரத்தில் மாற்றம் -அரசாங்கம் அறிவிப்புபத்தரமுல்லை பிரதேசத்திலுள்ள அரச காரியாலயங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தினசரி சேவை நேரத்தில் மாற்றம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, தினசரி காலை காரியாலய நேரம்  7.30 மணிமுதல் காலை 9.15 மணி வரையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மாலையில் ஒய்வு பெறும் தினசரி நேரமாக 3.15 மணிமுதல் மாலை 5.00 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளது.
தினசரி காலையிலும், மாலையிலும் பாதையில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் இன்று (17) அறிவித்துள்ளது.