சாதனைச் சான்று விழா

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திலிருந்து 2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தேறிய மாணவர்களையும், தேற்றிய அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்களையும் எடுத்தாண்டு பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு இன்று (07) காலை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் காலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கோணாவத்தை அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பாராட்டு விழா ”சாதனைச் சான்று விழா” எனும் தலைப்பில் கோணாவத்தை அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினருமான தமீம் ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபில் என்.எம். அப்துல்லா மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேஹ், ஏ.எல்.எம். காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அந்-நூர் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம். மிஸ்வர், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல்களின் தலைவருமான ஏ.எல்.ஹனீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் எஸ்.எம். முனாஸ்டீன் விசேட அதிதியாகவும், அதிதிகளாக கோணாவத்தை ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். அமீன் மற்றும் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

2016ஆம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக 32மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி சகல மாணவர்களும் சித்தியடைந்தனர். இம்மாணவர்களையும், கற்பித்த அதிபர், ஆசியரியர்களையும் பாராட்டுமுகமாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 8ஏ, 1பீ பெறுபேற்றினைப் பெற்ற இரு மாணவர்களையும் பிரதம அதிதிகளினால் பாராட்டி ஞாபகச்சின்னங்கள் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.