இலங்கை முஸ்லிம் பெண்களை ஏமாற்றும் ஆன்லைன் சொப்பிங் பேஸ்புக் பேஜ்கள்!ளர்ந்து வரும் நவீன உலகில் எல்லாமே சுருங்கிப்போய்விட்டாலும் அவற்றில் பாரிய விளைவுகளும் இருக்கிறது காரணம் வேலைகளை சுருக்கி விட்டோம் ஆனால் தவறுகளை தடுக்க மறந்து விட்டோம். இன்று சமூக வலைத்தளங்கள் எமக்கு பெரிதும் உதவுகிறது. ஆனால் அதில் விளைவுகளும் அதிகம். அதில் ஒன்றுதான் ஆன்லைன் சொப்பிங் செய்ய ஒரு சில விசம பக்கங்கள்.

இந்த பக்கங்கள் மூலம் பொருட்களை அதிகம் பெண்களே கவரப்படுகின்றனர், குறிப்பாக பெண்களுக்கு தேவையான உடை மற்றும் அழகு சாதனப்பொருட்கள் ஜூவலறிகள் என்பன விற்கப்படுகிறது. இந்த பொருட்களை கொள்வனவு செய்ய மொபைல் ஈசி கேஸ் மூலம் பணம் அறவிடப்படுகிறது. சகோதரிகளின் வாட்ஸ்அப் இலக்கங்கள், மொபைல் தொடர்புகள் தேசிய அடையாள அட்டை என்பன பரிமாறப்படுகிறது. சில சமயங்களில் புகைப்படமும் பரிமாறப்படுகிறது.

முஸ்லிம் அல்லாத சிறு சிறு ஆன்லைன் சொப்பிங் கம்பனிகள் முஸ்லிம் பெண்களின் நம்பர்களையும் தொடர்புகளையும் சேகரிக்கின்றது. ஹபாயாக்கள் இன்னோரன்ன பொருட்களை விற்பதாக சொல்லி எமது முஸ்லிம் சகோதரிகளை தங்கள் வலைக்குள் சிக்கவைக்கும் புதுமையான தந்திரம் மேற்கொள்ளபடுகிறது. அவதானமாக இருக்கவும்.