தேசிய வளங்களை பாதுகாப்போம் - தொழிலாளர்களிடம் மஹிந்த வேண்டுகோள்
உயிர் கொடுத்து பாதுகாக்கப்பட்ட தேசிய வளங்கள் மற்றும் அரச சொத்துக்கள் என்பவற்றைப் பாதுகாக்கும் தேசிய கொள்கை கொண்ட அணியுடன் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சகல உழைக்கும் மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேசிய வளங்கள் பறிகொடுக்கும் யுகமொன்று  தற்பொழுது நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பழிவாங்கும் அரசியலிலிருந்து விடுபட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சமூக, பொருளாதார மாற்றமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது எனவும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்