அட்டாளைச்சேனையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அமைச்சர் நஸீர்

May 26, 20170 comments


சப்னி அஹமட்

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தினைகிழக்கு மாகாண சுகாதார அமைச்சு கிழக்கு மாகாணம் முழுவதும்நடைமுறைப்படுத்திவருகின்றதுஅந்தவகையில் அட்டாளைச்சேனைசுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாடில் அட்டாளைச்சேனைபிரதேசம் முழுவதும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கானநடவடிக்கைகள் இன்று (26) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் .எல்முஹம்மட் நஸீரின் பங்குபற்றதலுடன்விசேட சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதான வீதிகளில் உள்ள வடிகான்களும் அதனைஅண்டிய பிரதேசங்களும் அசுத்தமைடந்து காணப்படுவதுடன்டெங்குஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் இதனை தடுபதற்காகவேஇத்திட்டம் மேற்கொள்ளப்பட்டடாதா கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்தெரிவித்தார்.

வடிகானுள் வீட்டுக்கழிவுகள்கடைக்கழிவுகளை செலுத்துதல் தங்களதுஎல்லைக்குள் வைத்துக்கொள்ளுமாறும்திண்மக்கழிவுப்பொருட்களையும்குப்பைகளையும் பிரதேச சபை மூலம் அகற்றுவதற்குரிய ஏதுவான இடத்தில்வைக்குமாறும்கட்டிட நிமாணத்திற்கு பாவிக்க கூடிய கல்மண்ணைவீதியோரங்களிலையோவடிகான்களிலையோ இடமால் தங்களது சொந்தஇடங்களில் வைக்குமாறும்வடிகானுள் நீர்களை ஓடவிடக்கூடியவாறுவைக்குமாறும்தங்களது வீடுகடைவெற்று வளவு ஆகியவற்றை சுத்தமாகவைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.வெற்றுவளவுகளுல் டெங்கு நோய் அச்சமுள்ள இடங்களில் சிவப்புஎச்சரிக்கை படிவம் இடப்பட்டதுடன் வடிகான்கள்வீதிப்பிரச்சினைகள் சிலஅடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டன.

இதன் போது,  கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம்.நசீர்மாவட்ட நீதிபதி அல் ஹாபிழ் என்.எம்அப்துல்லாஹ்,  சத்திர சிகிச்சையாளர் வைத்தியர்  மனாப் ஷரீப்சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .எல்அலாவுதீன்அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ்அட்டளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்..எம்.பாயிஸ்அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் .எல்கமுர்தீன்ஆகியோருடன்அரச உத்தியோகத்தர்கள்கடை உரிமையாளர்கள்,பொதுமக்கள்பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு துப்பரவு பணியில்ஈடுப்பட்டனர்.
Share this article :