Header Ads

ad728
 • Breaking News

  இனவாத விளக்கிற்கு எண்ணையூற்றி முஸ்லிம்களின் பொறுமையில் தீமூட்ட வேண்டாம்!  ஞானசாரவை கைது செய்ய அரசாங்கம் தனிப் பொலிஸ் படை அமைத்து தேடிவரும் சூழ்நிலையில் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகியிருக்கும் ஞானசாரவை சாதாரண ஊடகவியலாளரான ஸ்ரீ சமந்த ரத்னாசேகர என்பவரால்  சந்திக்கலாம், தொடர்பு கொள்ள முடியுமாக இருந்தால் அரசாங்கம் கடந்த ஒரு வாரமாக அரச இயந்திரங்கள் அத்தனையையும் பாவித்தும் ஞானசார ஏன் கண்டுபிடித்து கைது செய்யவில்லை என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தனைக்கு உட்படுத்த வேண்டும்.

  கடந்த அரசாங்கத்தை வீழ்த்தவும் இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றவும் இனவாத அரசியல் வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட ஞானசாரவை நல்லாட்சி கைது செய்து கூண்டில் அடைக்கும் என்று முஸ்லிம்கள் நம்பிக்கையுன் காத்திருப்பது குளம் வற்றும் வரை குடல் இழைத்து சாவும் கொக்குக்கு ஒப்பான கதைபோன்றதாகும்.

  ஞானசாரவை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ள அரசாங்கம் அவரை கைது செய்யப்போவதாக கூறுவது வெறும் நாடகமே தவிர வேறில்லை. அண்மையில் இடம்பெற்ற அரச தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஞானசாரவுக்கும் அரசாங்கத்திற்குமுள்ள தொடர்பு பற்றி மிகத்தெளிவாக கூறியிருந்தார். மட்டக்களப்பிற்கு ஞானசார தேரரை பாதுகாப்புடன் அழைத்து வந்த அந்த அமைச்சர் என, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷாவை நேரடியாக குற்றம் சாட்டியதில் இருந்து அரசாங்கத்தின் பதுங்கு குழியில் ஞானசார பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை சந்தேகமில்லாமல் தெளிவாகிறது.

  இவ்வாறாக இருக்க ஞானசாரவின் இனவாத கருத்துக்களையும் அவருடைய அடாவடித்தனங்களையும்  தன்னுடைய  அரசியல் நலனுக்காகவும் சுய அரசியல் தேவைகளுக்காகவும் முஸ்லிம்கள் மத்தியில் தூண்டிவிட்டு ஆட்சியாளர்களின் கூடாரத்தில் தேனீர் அருந்தும் ஆசாத் சாலி அவர்கள் ஞானசாரவின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் காரணமான ஒருவர் என்பதையும், கடந்த மஹிந்த அரசை தோற்கடிக்க ஏவப்பட்ட ஏவல் மிருகங்களின் அனுசரணையாளர் இந்த ஆசாத் சாலி என்பதையும் அவர் நல்லாட்சியை தூக்கிச் சுமந்து கொண்டு முஸ்லிம்கள் மத்தியில் தன்னை சமூகவாதியாக காட்டிக்கொள்ள முயற்சிப்பதை முஸ்லிம் சமூகம் கவனிக்க மறக்க கூடாது. 

  அத்துடன் ஞானசார இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவார் என முஸ்லிம் சமூகத்தில் மத்தியில் வேப்பை காட்டுவதையும் அறிக்கை விடுவதையும்  நிறுத்திவிட்டு சகோதரர் ஆசாத் சாலி அவர்கள் ஞானசாரவை ஒழித்து வைத்திருக்கும் இடத்தை பொலிசாருக்கு அடையாளப்படுத்துமாறு கூறிவைக்க விரும்புகிறேன்.

  நேற்றைய தினம் கண்டி பிலிமதலாவ தந்துர பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞன் ஒருவரால் முகநூலில் எழுதப்பட்ட விடயம் ஒன்றின் பின்னணியில் குறித்த அந்ண பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த இளைஞனுக்கு எதிராக பலர் விமர்சனம் செய்துவருவதையும் அவதானிக்க முடிகிறது. ஞானசார அல்லாஹுவையும் ரஸூலையும் கேவலமாக விமர்சிக்காமல் இருந்திருந்தால் அந்த இளைஞன் அவ்வாறு விமர்சிக்க வாய்ப்பிருந்திருக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஞானசாரவின் இஸ்லாம் பற்றிய விமர்சனமே அந்த முஸ்லிம் இளைஞன் பௌத்தத்திற்கு எதிராக எழுத தூண்டப்பட்டிருக்கிறார். இதுபோல் இன்னும் பலர் சமநிலை தவறும் பட்சத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமைந்துவிடலாம்.

  எனவே எல்லாக் காலமும் முஸ்லிம்களின் பொறுமையில் விளையாடுவதை பார்த்துக்கொண்டு முஸ்லிம் சமூகம் தலைகுணிந்து வாய்மூடி கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். எந்தளவு இஸ்லாம் பொறுமையையும் மன்னிப்பையும் வழியுறுத்துகிறதோ அதே அளவு இஸ்லாத்தின் விரோதிகளுக்கு எதிராக எப்படி செயற்பட வேண்டும் எனவும், இஸ்லாம் சொல்லித் தந்திருக்கிறது.

  அகவே, அரசாங்கத்தின் விளக்குக்கு எண்ணையாக இருந்து முஸ்லிம்கள் பொறுமையில் திமூட்டுவதை விட்டுவிட்டு,
  உங்களால் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தர முடியாவிட்டாலும் மேலும் பிரச்சினை வருவதற்கு காரணமாக இருக்காது விளகி நின்று கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட முஸ்லிம் அரசியல் தரகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

  அஹமட் புர்க்கான்

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad

  ad728