முதலமைச்சரின் முயற்சியால் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வழங்கும் திட்டம்



கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின்பேரில் இலங்கையின் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான அல்-இஹ்சான் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த வசதிகுறைந்த மக்களுக்கான குடிநீர் இணைப்புக்கள் மற்றும் குழாய்க்கிணறுகள் அமைத்துக்கொடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏறாவூரின் எல்லைப்புறத்தில் இயங்கிவரும் அபூபக்கர் சித்தீக் பள்ளிவாயல் / அரபுக் கல்லூரிஜாமியா ஆயிஷா சித்தீக்கியா அரபுக் கல்லூரி ஆகிய இஸ்லாமிய நிறுவனங்கள் தங்களது அத்தியாவசிய தேவையான குழாய்க்கிணறு மற்றும் தண்ணீர்த் தாங்கிகளைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக இன்று தண்ணீர்த் தாங்கிகளும் குழாய் நீர் இணைப்பிற்கான வசதிகளும் அல்-இஹ்சான் அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டன.

Powered by Blogger.